திருக்குறள்

726.

வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடென் நுண்ணவை அஞ்சு பவர்க்கு.

திருக்குறள் 726

வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடென் நுண்ணவை அஞ்சு பவர்க்கு.

பொருள்:

கோழைகளுக்குக் கையில் வாள் இருந்தும் பயனில்லை; அவையில் பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லை.

மு.வரததாசனார் உரை:

அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு, நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு.

சாலமன் பாப்பையா உரை:

நெஞ்சுறுதி இல்லாதவர்க்கு வாளால் என்ன பயன்? அறிவுத்திறம் மிக்க அவைகண்டு பயப்படுபவர்க்குத் தர்க்க சாஸ்திர நூலால் பயன் என்ன?.